2021 - CBSE INFO

Thursday 18 November 2021

அதிக நாள் உயிர் வாழ ஆசையா... இதை சாப்பிட்டு வாங்க!

11/18/2021 10:24:00 am 0
அதிக நாள் உயிர் வாழ ஆசையா... இதை சாப்பிட்டு வாங்க!

 

பூண்டு உலகின் கிட்டத்தட்ட எல்லா வீட்டு சமையல் அறைகளிலும் இருக்கும் பொருள். உணவுக்கு சுவை மட்டுமின்றி உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரக் கூடியது பூண்டு.

மற்ற காய்கறிகளைப் போல இதில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், தாமிரம், வைட்டமின்கள் ஏ, பி, சி உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன.

தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் கிடைக்கக் கூடிய பலன்களைப் பற்றிப் பார்ப்போம்...

பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். நோய்க் கிருமிகள், பூஞ்சை தொற்றுகளை அழிக்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். சாதாரண சளி, காய்ச்சல், காதுகளில் ஏற்படும் தொற்று என பல பிரச்னைகளைத் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

பூண்டு இதய நோய்களுக்கான வாய்ப்பைக் குறைத்து இதயத்தை பாதுகாக்கும். ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் குறைப்பதுடன், ரத்த நாளங்களில் படிந்த கொழுப்பையும் கரைக்கும். எச்.டி.எல் என்ற நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்து எல்.டி.எல் அளவைக் குறைக்கிறது.

பூண்டு உடல் முழுக்க சீரான ரத்த ஓட்டம் நடைபெறுவதற்கு துணை செய்கிறது. பூண்டின் ரத்தம் கட்டியாவதைத் தடுக்கும் பண்புகள் ரத்த ஓட்டம் சீராக நடைபெறத் தூண்டுகிறது. ரத்தத்தை அதிகம் நீர்த்து போகச் செய்து உடல் முழுக்க எளிதான ரத்த ஓட்டம் நடைபெற செய்கிறது. ரத்தம் உறைதல் பிரச்னையைத் தடுக்கிறது.

பூண்டு உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட பிரச்னையையும் இது சரி செய்கிறது. கல்லீரல் செயல்திறனை மேம்படுத்துகிறது. கல்லீரல், பித்தப்பை, சிறுநீர்ப்பை, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பூண்டில் அதிக அளவில் கந்தம் உள்ளது. இது உடலில் உள்ள உறுப்புகள் கடினமான உலோக நச்சுக்களால் பாதிப்படைவதைத் தடுக்கிறது. குறிப்பாக உலோக தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு தினமும் பூண்டு அளித்து சோதனை செய்யப்பட்டது. இதில் நச்சுக்கள் அளவை 19 சதவிகிதம் அளவுக்கு பூண்டு குறைத்திருந்தது கண்டறியப்பட்டது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது, இதயம், கல்லீரல் உள்ளிட்ட உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, கொலஸ்டிரால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது என மொத்தத்தில் பூண்டு மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும் பொக்கிஷமாகப் பூண்டு விளங்குகிறது.

Tuesday 16 November 2021

இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க சாப்பிட உதவும் காய்கறிகள்.!

11/16/2021 01:00:00 pm 0
இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க சாப்பிட உதவும் காய்கறிகள்.!

 இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்க வழக்கமான உடற்பயிற்சியுடன் குறைந்த கார்போஹைட்ரேட், அதிக புரதம் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட உணவு பரிந்துரைக்கப்படுகிறது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட பல்வேறு காய்கறிகள் உள்ளன.

கிளைசெமிக் இன்டெக்ஸ் இரத்த ஓட்டத்தில் ஒரு குறிப்பிட்ட உணவில் இருந்து குளுக்கோஸ் வெளியிடப்படும் விகிதத்தைப் பற்றிய ஒரு யோசனையை வழங்குகிறது. இதைப் பொறுத்து உணவுகளை குறைந்த, நடுத்தர மற்றும் அதிக கிளைசெமிக் குறியீட்டு உணவுகள் என வகைப்படுத்தலாம். கிளைசெமிக் குறியீட்டைத் தவிர, உணவின் கிளைசெமிக் அளவும் முக்கியமானது, இது உட்கொள்ளும் உணவுப் பகுதியில் உள்ள மொத்த கார்பிலிருந்து சர்க்கரை வெளியிடப்படும் விகிதமாகும்.


55 GI க்கும் குறைவான உணவுகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவு என்று அழைக்கப்படுகின்றன. GI 56-69 உள்ள உணவுகள் மிதமான கிளைசெமிக் குறியீட்டு உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன. 70 க்கும் அதிகமான GI கொண்ட உணவுகள் உயர் கிளைசெமிக் குறியீட்டு உணவுகள் என்று அழைக்கப்படுகினறன. சர்க்கரை அளவை சீராக பராமரிக்க குறைவான கிளைசெமிக் குறியீட்டு எண் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைவான கிளைசெமிக் குறியீட்டு எண் காய்கறிகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸில் சல்ஃபோராபேன், கேம்ப்ஃபெரால் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இதில் கரையாத நார்ச்சத்தும் உள்ளது, இது ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது மற்றும் செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இதில் வைட்டமின் கே நிறைந்துள்ளது, இது ஒரு உறைதல் காரணி என்றும் அழைக்கப்படுகிறது. எனவே நீங்கள் இரத்தத்தை மெலிக்கும் நிலையில் இருந்தால் அதை மிதமாக உட்கொள்ள வேண்டும்.

காலிஃபிளவர் 

காலிஃபிளவரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஐசோதியோசயனேட்டுகள் மற்றும் குளுக்கோசினோலேட்டுகள் நிறைந்துள்ளன, அவை வலுவான மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இதில் உள்ள கரையாத நார்ச்சத்து மனநிறைவு உணர்வை ஊக்குவிக்க உதவுகிறது. காலிஃபிளவரில் கோலின் நிறைந்துள்ளது, இது நரம்பியக்கடத்திகள் உற்பத்தி மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

தக்காளி 

தக்காளியில் அதிக நார்ச்சத்து உள்ளது மற்றும் லைகோபீன் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தக்காளி பொட்டாசியத்தின் நல்ல மூலமாகும், இது உயர் இரத்த அழுத்த மேலாண்மைக்கு உதவுகிறது. சிறுநீரக நோயாளிகள் இதை மிதமாக உட்கொள்ள வேண்டும்.

வெண்டைக்காய்

வெண்டைக்காயில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், கரோட்டினாய்டுகள் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது குறைந்த ஹோமோசைஸ்டீன் அளவை பராமரிக்க உதவுகிறது, இது நரம்பியல் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது. நார்ச்சத்து உணவின் நல்ல கிளைசெமிக் கட்டுப்பாட்டை பராமரிக்க உதவுகிறது.

பிரெஞ்சு பீன்ஸ்

பிரெஞ்சு பீன்ஸில் வைட்டமின் சி, நார்ச்சத்து, வைட்டமின் கே மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. வைட்டமின் கே எலும்புகளில் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது மற்றும் கால்சியத்தின் சிறுநீர் வெளியேற்றத்தை குறைக்கிறது.

சேப்பங்கிழங்கின் அற்புத நன்மைகள்.!

11/16/2021 12:16:00 pm 0
சேப்பங்கிழங்கின் அற்புத நன்மைகள்.!

 





பொதுவாக சேப்பங்கிழங்கு, கிழங்கு வகை என்பதால், பொதுவாக நாம் அதை உண்ணாமல் ஒதுக்கி விடுகிறோம்.

ஆனால், சேப்பங்கிழங்கு காய்கறி ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் A, C, E, வைட்டமின் B6 மற்றும் போலேட் என்னும் vitamin B-9 அதிக அளவில் உள்ளது. மக்னீசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தனிமங்கள் நிறைந்துள்ளன அவை உங்களை நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.

1. இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் அபாயம் குறையும்

சேப்பங்கிழங்கில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் சி, ஈ உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய நோய்கள், புற்றுநோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.

2. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

சேப்பங்கிழங்கில் மாவுச்சத்து நிறைந்துள்ளது. இரண்டு வகையான கார்போஹைட்ரேட்டுகள் உள்ள இந்த சேப்பங்கிழங்குஇரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். சேப்பங்கிழங்கு செரிமானத்தை மேம்படுத்தி, உடலில் கார்போஹைட்ரேட்டுகள் உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகிறது. அதனால் சாப்பிட்ட உடனேயே இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பைத் தடுக்கிறது.

3. நோய் எதிர்ப்பு சக்தி

சத்துக்கள் நிறைந்த அரபியை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும் பலப்படும். இதில் உள்ள வைட்டமின் சி ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

4. எடை குறையும்

சேப்பங்கிழங்கு எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இதை சாப்பிடுவதால் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும் என்பதால், பசி எடுக்காமல் இருக்கும். இது உங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது. சேப்பங்கிழங்கில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், சேப்பங்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


5. செரிமானம் தொடர்பான பிரச்சனை நீங்கும்

சேப்பங்கிழங்கில்ஏராளமான நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை சரியாக வைக்கிறது. இதனுடன் வாயு பிரச்சனை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவையும் நீங்கும்.

6. கண் ஆரோக்கியம்

சேப்பங்கிழங்குகண்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது.

7. தசைகள் வலுவாகும்

சேப்பங்கிழங்கில் உள்ள மெக்னீசியம் உங்கள் தசைகள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை பின்பற்றும் முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.

Monday 15 November 2021

தோப்புக்கரணம் போடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !

11/15/2021 11:08:00 am 0
தோப்புக்கரணம் போடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !

  


தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.

தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போடவேண்டும். பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.

உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் மூலாதாரத்தில் – சக்தி உருவாகும்.

உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

தோப்புக்கரணம் போடும்போது மூளையின் நியூரான் நரம்புகள் தூண்டப்பட்டு புத்துணர்ச்சி அடையும். அதனால், மனம் ஒருமுகப்படுகிறது. நினைவாற்றல் அதிகரிக்கும்.

உடல், புத்துணர்ச்சி பெறும். மன அழுத்தம், மனச் சோர்வு விலகும். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொள்வதால் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதுடன் மூளை நரம்புகள் சக்தி பெறுவதாகக் கூறுகிறார்கள் நரம்பியல் வல்லுநர்கள்.

மூளையின் வலது மற்றும் இடது பகுதி சமமாகத் தூண்டப்படுகிறது. மேலும், மூளைக்குச் செய்திகளைப் பரிமாற்றம் செய்யும் நரம்புகள் வலுப்பெறுகின்றன.

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத வைட்டமின்கள்.!

11/15/2021 11:06:00 am 0
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத வைட்டமின்கள்.!

 குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் நிறைந்த உணவுகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை.

இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும்.

* வைட்டமின் 'ஏ' குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் 'ஏ' அதிகம் காணப்படுகிறது.

* வைட்டமின் 'பி' குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

* வைட்டமின் 'சி' குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும்; பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

* வைட்டமின் 'டி' இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் 'டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் 'டி'யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் 'டி' அதிகம் உள்ளது.

* வைட்டமின் 'ஈ' குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், இரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் 'ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.

Saturday 13 November 2021

லேட்-ஆ தூங்குபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான ஆபத்து 25 சதவீதம் அதிகம்!

11/13/2021 10:20:00 am 0
லேட்-ஆ தூங்குபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான ஆபத்து 25 சதவீதம் அதிகம்!


 

ஒரு சர்க்காடியன் ரிதம் (Circadian Rhythm) என்பது இயற்கையான, உள் செயல்முறையாகும்.

இது தூக்க-விழிப்பு சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் ஒரு முறை மீண்டும் நிகழ்கிறது. எந்தவொரு உயிரியல் செயல்முறையையும் இது குறிக்கலாம். சர்க்காடியன் சுழற்சி பொதுவாக ஒளி மற்றும் இருண்ட, விழிப்புணர்வு மற்றும் தூக்கத்தின் காலங்களுக்கு பதிலளிக்கிறது.


புனித் ராஜ்குமார், சித்தார்த் சுக்லா போன்ற நடிகர்கள் மாரடைப்பால் உயிரிழந்தனர். சமீபத்திய ஆய்வின்படி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, சரியான நேரத்தில் தூங்க வேண்டும் என்றும், உங்களுக்கான தூங்குவதற்கு சரியான நேரத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு ம்,மனிதன் இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்க செல்ல வேண்டும் என இங்கிலாந்தின் எக்ஸிடெர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

இதுக்குறித்து ஆராய்ச்சியாளர் பேராசிரியர். டேவிட் பிளான்ஸ் கூறுகையில், உடலில் சர்க்காடியன் ரிதம் எனப்படும் 24 மணிநேர உள் கடிகாரம் உள்ளது. உடல் மற்றும் மன செயல்பாடுகளுக்கு இடையில் சமநிலையை உருவாக்க அவை செயல்படுகின்றன. தூங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் சரியான நேரத்தை நிர்ணயிக்காததால், இந்த கடிகாரம் சமநிலையற்றதாகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இரவு 10 மணிக்கு முன் தூங்குபவர்கள் மற்றும் நள்ளிரவுக்குப் பிறகு தூங்குபவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து 25% அதிகமாக இருக்கும்.


88 ஆயிரம் பேர் கண்காணிக்கப்பட்டனர்:
ஒரு தசாப்தமாக, ஒரு சாதனம் 88,000 பேரின் மணிக்கட்டில் கட்டப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ந்து எந்த நேரத்தில் தூங்கினார்கள் என்பது கண்காணிக்கப்பட்டது. முதல் ஐந்தாண்டுகளில் 3172 பேருக்கு இதயப் பிரச்சனைகள் கண்டறியப்பட்டன. மாரடைப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தன.

தாமதமாக தூங்குபவர்கள் ஏன் அதிக ஆபத்து?
சரியான நேரத்தில் தூங்காததால், ஒரு நபர் அதிகாலை வெளிச்சத்துடன் தொடர்பு கொள்ள முடியாது. இதனால் இயற்கையான, உள் செயல்முறை கடிகாரம் சுழற்சியை ஒழுங்குபடுத்தாது. எனவே 7 முதல் 9 மணி நேரம் தூக்கம் அவசியமான ஒன்றாகும்.

சர்க்காடியன் ரிதம் தூக்கக் கோளாறு அறிகுறிகள்:
தூக்கமின்மை
அதிக தூக்கம்
சர்க்காடியன் அசாதாரணங்கள்
சோர்வு
உடல்சோர்வு
மனநிலை கோளாறு
இரைப்பை குடல் பிரச்சினைகள்
லிபிடோ குறைக்கப்பட்டது
மாற்றப்பட்ட பசியின்மை
சர்க்காடியன் ரிதம் தூக்கக் கோளாறு, ஒரு நோயாளியின் உடலில் எவ்வித உடல்ரீதியான அறிகுறிகளையும் தாராமலும்கூட இருக்கலாம்.

தேங்காயினை தினம்தோறும் சாப்பிட்டுவருவதால் கிடைக்கும் நன்மைகள் !

11/13/2021 10:17:00 am 0
தேங்காயினை தினம்தோறும் சாப்பிட்டுவருவதால் கிடைக்கும் நன்மைகள் !

அதிக அளவில் ஊட்டச்சத்து உள்ள இயற்கை உணவான தேங்காயினை தினம் தோறும் சாப்பிட்டுவந்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் எராளம்.

 ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படாமல் இருப்பதற்கு தேங்காயில் உள்ள வேதிப்பொருட்கள் எலும்புகளை வலிமைப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் இது பற்களுக்கு பளபளப்பு தன்மையை கொடுக்கின்றது.தேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. தினமும் காலையில் சிறிதளவு தேங்காயை மென்று என்பதால் உடலுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிடைத்து எலும்புகள் மற்றும் பற்களை வலுவடைய செய்கிறது.

சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் முகப்பரு, தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய ஒரு மிக சிறந்த இயற்கை மருந்தாக உள்ளது.

தோலின் தோற்றமானது பளபளப்பு தன்மையுடன் இருப்பதற்கு நாள்தோறும் சிறிதளவு தேங்காயினை மென்று சாப்பிட்டு வர வேண்டும்.

தேங்காயில் புரதம் மற்றும் செலீனியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப் பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது.

தேங்காயில் இருக்க கூடிய கொழுப்பு மற்றும் எண்ணெய் இரத்தத்தில் கலந்து பளபளப்பான தோற்றத்தினை கொடுக்கும்.சுருக்கங்களை போக்கி இளமை தோற்றத்தை தருகிறது.

தேங்காயினை பச்சையாக நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலமாக நார்ச்சத்தானது முழுமையாக நமக்கு கிடைக்கின்றது. அதுமட்டுமில்லாமல் செரிமானத்திற்கு முக்கியமானதாக கருதப்படும் என்சைம்களின் உற்பத்தியினை அதிகரிக்கின்றது.

Friday 12 November 2021

லெமன் காபி உடல் எடையை வேகமாக குறைக்க உதவுமா? உண்மை என்ன?

11/12/2021 08:18:00 am 0
லெமன் காபி உடல் எடையை வேகமாக குறைக்க உதவுமா? உண்மை என்ன?

 வீட்டில் இருந்து வேலை செய்து உடல் பருமனாகிவிட்டதா? உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பதற்கு உடற்பயிற்சிகளுடன் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

பெரும்பாலான மக்கள் எடை இழப்பு விஷயத்தில் குறுக்குவழிகளைத் தேடுகிறார்கள். இதனால் சீரக நீர், மஞ்சள் நீர், தேன் கலந்து எலுமிச்சை நீர் என்று ஏராளமான பானங்கள் உடல் எடையை திறம்பட குறைக்கும் தந்திரங்களாக இணையத்தில் உலா வருகின்றன. சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்தால் உடல் எடை குறையும் என்று உறுதி அளிக்கிறார்கள்.

சமீபத்தில் எலுமிச்சை காபி/லெமன் காபி உடல் கொழுப்பு வேகமாக குறைப்பதாக ஒரு டிக்டாக் பயனர் பரிந்துரைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக இந்த காபி தலைவலி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் அளிப்பதாக நம்பப்படுகிறது. இந்த கூற்று உண்மை தானா என்பதை இப்போது காண்போம்.


எலுமிச்சை மற்றும் காபி

எலுமிச்சை மற்றும் காபி ஆகிய இரண்டுமே சமையலறையில் காணப்படும் பொருட்களாகும். இவை இரண்டுமே சத்துக்களைக் கொண்டவை மற்றும் தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. எடை இழப்பு என்று வரும் போது, இவை இரண்டுமே மிகவும் நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது.


காபியின் நன்மைகள்:

உலகளவில் ஏராளமானோர் விரும்பி குடிக்கும் பானம் தான் காபி. இந்த காபியில் உள்ள காப்ஃபைன் உடல் மெட்டபாலிசத்தை வேகப்படுத்துகிறது, மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது, மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்கிறது.


எலுமிச்சையின் நன்மைகள்:

எலுமிச்சையின் நன்மைகளைச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இது வயிறு நிறைந்த முழுமையை ஊக்குவிக்கிறது, திருப்தியை அதிகரிக்கிறது மற்றும் தினசரி கலோரி உட்கொள்ளும் அளவைக் குறைக்கிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை தடுக்கிறது.


லெமன் காபி எடை இழப்பில் பயனுள்ளதா?

எலுமிச்சை மற்றும் காபி ஆகிய இரண்டும் ஆரோக்கியமானவை என்பது உண்மை தான். ஆனால் இவை உடல் கொழுப்பை எரித்து, அழகிய உடலமைப்பை விரைவில் பெற உதவும் என்பது சற்று சந்தேகம் தான். காபியில் எலுமிச்சையை சேர்ப்பது பசியைக் குறைத்து, வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தும். ஆனால் கொழுப்பை எரிப்பது கொஞ்சம் கடினம் தான்.

உடல் கொழுப்பைக் குறைப்பது என்பது எளிதான காரியமல்ல. அதுவும் வெறும் எலுமிச்சை நீரை மட்டும் குடித்து குறைப்பது என்பது கடினமே. ஒருவரது எடை குறையும் போது உடல் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. அதில் இரவில் நல்ல தூக்கம் வரும், நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் குறையும், மனநிலை மேம்படும் மற்றும் ஆரோக்கியமாக இருப்பதை உணரக்கூடும்.

லெமன் காபி தலைவலியைக் குறைக்க மற்றும் செரிமானத்தை அதிகரிக்க உதவுமா?

லெமன் காபி தலைவலியில் இருந்து நிவாரணம் அளிப்பதாகவும், செரிமானத்தை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. இருப்பினும், இந்த விஷயத்தில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. சில ஆய்வுகள் காப்ஃபைன் இரத்த நாளங்களை இறுக்கும் விளைவைக் கொண்டிருப்பதால், இது தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது என்று கூற, வேறு சில ஆய்வுகள் அதிகப்படியான காப்ஃபைனை உட்கொள்வது தலைவலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றன.

வயிற்றுப் போக்கு விஷயத்தில் கூட, இந்த லெமன் காபி பானம் செரிமான ஆரோக்கியத்தை எவ்வாறு அதிகரிக்கும் என்பதை கூறும் தெளிவான ஆய்வு எதுவும் இல்லை. பொதுவாக வயிற்றுப்போக்கால் அவதிப்படும் போது மலத்தை இறுக்க திட உணவுகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. எனவே லெமன் காபி குடிப்பது நல்ல யோசனையல்ல. எனவே சான்றுகள் எதுவும் இல்லாததால், லெமன் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை உறுதியாக கூற முடியாது. இதுக்குறித்த ஆய்வு நிறைய தேவைப்படுகிறது.


லெமன் காபி தயாரிக்கும் முறை:

இதுவரை பார்த்ததில், காபியில் எலுமிச்சையை சேர்ப்பதால் நிறைய நன்மைகள் இல்லை என்பது தெளிவாகிறது. நீங்கள் இன்னும் முயற்சிக்க நினைத்தால், ஒரு கப் காபியில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடியுங்கள். ப்ளாக் காபியில் தான் எலுமிச்சை சாற்றினை சேர்க்க வேண்டுமே தவிர, பால் காபியில் சேர்க்கக்கூடாது. லெமன் காபியை ஒரு கப்பிற்கு மேல் குடிக்க வேண்டாம். முக்கியமாக உடல் எடையைக் குறைக்க லெமன் காபியை முயற்சிக்க விரும்பினால், தினசரி உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான உணவையும் உட்கொள்ள வேண்டும்.

தேகப்பொலிவு முதல் குடல் ஆரோக்கியம் வரை; மக்காச்சோளத்தின் மகத்துவம்.!

11/12/2021 08:14:00 am 0
தேகப்பொலிவு முதல் குடல் ஆரோக்கியம் வரை; மக்காச்சோளத்தின் மகத்துவம்.!

 

தகிக்கும் செங்கனல். துளிரும் வெண்புகை. சூடேறும் பச்சை சோளம். நம்மை சுண்டி இழுக்கும் அற்புத உணவுச் சூழல் இவை.

பெரும்பாலான மலை சுற்றுலா தலங்களில் மக்காச் சோளக் கடைகள் வீற்றிருப்பதைப் பார்க்க முடியும். மலையின் சில்லென்ற பனிமூட்ட சூழலுக்கு, சோளத்தின் சூடான ஆவி அக்மார்க் காம்பினேஷன் அல்லவா! அசைவ `பார்-பிக்யூ' போல சைவ உணவுப் பிரியர்களுக்கான பார்-பி-க்யூவாக சுட்ட சோளத்தைச் சொல்லலாம்.


குளிருக்குத் தோதான சுவை:

பச்சை சோளத்தை முழுமையாக எடுத்து, உலர்ந்த சருகுகள் மற்றும் கரியின் உதவியுடன் தகித்துக்கொண்டிருக்கும் கனலில் சுட்டு, தங்க நிறத்தில் இருக்கும் சோளத்தின் மீது கறுப்பு நிறம் படிய வழங்கப்படும் சுட்ட சோளத்தின் சுவை அலாதியானது. மிளகாய்ப் பொடியில் பாதி வெட்டிய எலுமிச்சம் பழத்தைத் தோய்த்து, சுட்ட சோளத்தின் மீது தடவி, சூடு பறக்க சுவைக்கும் போது அடடா. குளிருக்கு தோதான சுவை அது! சோளத்தின் சருகுகளுக்குள் சுட்ட சோளத்தை வைத்து பற்களால் கடித்து ருசிப்பது சுற்றுலா சிற்றுண்டிகளின் ஸ்பெஷல்!


தங்கம் வார்க்கும் தச்சன்:

அதுவும் பச்சை சோளத்தை சுட்டுத் தரும் அழகு இருக்கிறதே. கனல் பொறிகள் பறக்க, தங்கத்தை வார்ப்பதைப் போல, தங்க நிறத்திலிருக்கும் சோளத்தை வார்த்துக் கொடுக்கும் நேர்த்தி அழகானது! `பச்சை சோளத்தை சுட்டுக் கொடுப்பீர்களா, இல்லை வேக வைத்த சோளத்தை சுட்டுக் கொடுப்பீர்களா.' என்ற கேள்விக்கு பச்சை சோளத்தை சுட்டு சாப்பிடுவதுதான் தனித்துவமான சுவையைக் கொடுக்கும் சார். வேக வைத்து சுட்டு சாப்பிட்டால் அதன் தன்மையே மாறிவிடும்.' என்றார் அந்த சோளப் பெண்மணி!

`வேக வைத்த சோளத்தை சுட்டுத் தரக் கேட்டாலும் சுட்டுத் தருவோம், ஆனால் சுவைக்கு நாங்கள் பொறுப்பல்ல.' என்று புன்னகையுடன் பதிலளித்தார் அவர்!

`வியாபார ரீதியாக பார்க்கும் போது, சுற்றுலா வருவோர்களின் விருப்பமான சிற்றுண்டித் தேர்வில் எங்கள் சோளத்திற்கு எப்போதுமே முதன்மையான இடமுண்டு! மேலும் ஆரோக்கியமான உணவுப் பொருளை வழங்குகிறோம் என்ற திருப்தியும் எங்களுக்கு அதிகமுண்டு.' என முடித்தார்.

சுட்ட சோளம் தவிர, வேக வைத்த சோளமும் அங்கு கிடைக்கிறது. அதற்கான தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது. சுட்ட சோளத்தைப் பற்களால் கடித்துச் சுவைக்க முடியாதவர்கள் வேகவைத்த சோளத்தை நாடுகிறார்கள்.


மருத்துவப் பலன்கள்:

வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் தேவைக்கு ஏற்ப நார்ச்சத்தையும் ஒவ்வொரு சோளமும் நமக்காக சுமந்துகொண்டிருக்கின்றன! ஒவ்வொரு சோள முத்தாக கடித்துச் சாப்பிட்டால், முத்து போல ஆரோக்கியம் நமக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குடற்பகுதியில் நலம் பயக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை சோளத்தின் நார்ச்சத்து அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் சோளத்தில் உள்ள நிறமிச்சத்து, பார்வைத்திறனை அதிகரிப்பது மட்டுமன்றி, தேகத்திற்கு பொலிவைக் கொடுக்கவும் உதவுகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் முதன்மை சிற்றுண்டியாக சோளத்தை நாடலாம். சிறுவர் சிறுமிகளுக்கு விருப்ப சிற்றுண்டியாகவும் சோளம் மாறும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுக்குப் பிடித்த மாதிரி சோளத்தை தயார் செய்து வழங்கலாம்.


மக்காச் சோள மாவு:

மக்காச் சோள மாவு பஞ்ச காலங்களில் பலரது வறுமையைப் போக்கிய வரலாற்றை பலரும் அறிவார்கள். இப்போதும் ஊட்டம் தேவைப்படுபவர்கள் மக்காச் சோள மாவை வைத்து சிற்றுண்டி ரகங்களைத் தயாரிக்கலாம். மக்காச் சோள மாவை வைத்து கஞ்சி செய்து, ஊட்ட உணவாக தாராளமாகப் பயன்படுத்தலாம். சுற்றுலா தலங்களில் கிடைக்கும் சிற்றுண்டி ரகமான சோளத்தின் மருத்துவ குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.


எது எப்படியோ சோளத்தை வேகவைத்தோ, நெருப்பில் சுட்டோ வீட்டிலேயே சாப்பிடலாம் என்றாலும், சில்லென்ற மலைப்பகுதியில் சோளத்தைச் சுட்டு சாப்பிடுவது தனி அனுபவம்தான். `இடம் பொருள் ஏவல்.' வாழ்க்கைக்கு மட்டுமல்ல, உணவுக்கும்தான்!

Wednesday 10 November 2021

வெந்தயத்தில் இவ்வளவு நன்மைகளா.!? இனி தினமும் பயன்படுத்துங்கள்!

11/10/2021 10:50:00 pm 0
வெந்தயத்தில் இவ்வளவு நன்மைகளா.!? இனி தினமும் பயன்படுத்துங்கள்!

 தினமும் இரவு தூங்குவதற்கு முன்னதாக வெந்தயத்தை ஊறவைத்து, காலையில் சாப்பிட்டு வந்தால் உடலின் சூடு குறைந்து குளிர்ச்சி கிடைக்கும்.

வெந்தயம் ஊறவைத்த தண்ணீரையும் வீணாக்காமல் குடித்து வந்தால் நல்ல பணால் கிடைக்கும்.

வெந்தயத்தை சாப்பிட்டு, வெந்தய நீரை குடித்து வந்தால் உடல் சூடு, மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். எந்த நோயும் வரத்து. வெந்தயத்தை வானெலியில் வறுத்து, பொடியாக மாற்றிய பின்னர் மோர் அல்லது தண்ணீருடன் சேர்த்து குடிக்கலாம்.

வெந்தயத்துடன் பெருங்காய பொடியை நீர் அல்லது மோரில் சேர்த்து குடித்து வந்தால் வயிறு கோளாறுகள், அஜீரணம் போன்றவை சரியாகும்.

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். வெந்தயத்தை நன்றாக வறுத்து, காபியுடன் சேர்த்து குடித்து வந்தால், சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

வெந்தயம் உடலின் இரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. வெந்தய விதையில் இருக்கும் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோக சத்து, அமினோ அமிலங்கள் போன்றவை மூலமாக உடலுக்கு நல்ல சக்திகள் கிடைக்கிறது. வெந்தயத்தின் இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம் மற்றும் இரும்பு சத்து இருக்கிறது.

இவை உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன், உடலின் சமநிலையையும் பாதுகாக்கிறது. கோடைகாலத்தில் வெந்தயத்தை மோரில் கலந்து சாப்பிட்டால் நீரிழிவு பிரச்சனை, வயிற்று புண் பிரச்சனை, வாய் துர்நாற்ற பிரச்சனை போன்றவை சரியாகும்.

வெந்தயத்தை தீப்பட்ட இடங்களில் அரைத்து பூசலாம். வயிற்றுப்போக்கை சரி செய்து, தாய்ப்பாலை பேருக்கும் தன்மையும் வெந்தயத்திற்கு உண்டு. பெண்களுக்கு முடிகொட்டும் பிரச்சனையை சரி செய்ய, வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வு கட்டுக்குள் வந்து, முடி அடர்த்தியும் அதிகரிக்கும். இதனைப்போன்று பொடுகு, தலை அரிப்பு பிரச்சனையும் சரியாகும்.

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் !!

11/10/2021 10:41:00 pm 0
வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் !!

 வெறும் வயிற்றில் நீர் குடித்தால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

 காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். மலச்சிக்கலைச் சரிசெய்யும்.

நீரில் வெந்தியம், தேன், துளசி, வில்வம், அருகம் புல், இவற்றில் ஏதேனும் ஒன்றை 2 லிட்டர் நீரில் ஊற வைத்து நீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்.

வெதுவெதுப்பான தண்ணீரை குடித்தால் உடலின் மெட்டாபாலிசம் அதிகரிப்பதுடன், உண்ணும் உணவு விரைவில் செரிமானமாகி விடும். மேலும் இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்சிஜனை கொண்டிருப்பதால் உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.

எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். முகமும் பொலிவுடன் இருப்பதுடன், பருக்கள் வருவது குறைந்துவிடும்.

தண்ணீரானது நமது உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்கள் மற்றும் கிருமிகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றி, எப்போதும் நமது உடலின் சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

தண்ணீரை நாம் அதிகமாக குடித்தால், நமது உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கப்படும். இதனால் நீரிழிவு நோய் மற்றும் அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது.

நீரில் வெந்தயம் இரண்டையும் கலந்து குடிப்பதால், வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். பெண்களுக்கு ஏற்பட்டு வயிற்றுவலியை குறைக்கும்.

எடையை குறைக்க பாலை தவிர்க்க வேண்டுமா..!!

11/10/2021 12:14:00 am 0
எடையை குறைக்க பாலை தவிர்க்க வேண்டுமா..!!

 எடையை குறைக்க முயற்சிக்கும்போது, ​​​​ பல்வேறு உணவுப் பொருட்களைத் தவிர்க்கிறோம். டயட் செய்யும்போது எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்ற கேள்விகள் அதிகம் எழுகிறது.

மிகவும் பொதுவான சந்தேகங்களில் ஒன்று பால் எடுத்துக்கொள்வது பற்றியது. பால் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது, ஆனால் பாலில் கொழுப்பு நிரம்பியுள்ளதால், உடல் எடையை குறைக்கும் போது பாலை தவிர்க்க வேண்டுமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.

பாலில் நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) உள்ளது மற்றும் அதிக கலோரிகள் உள்ளன. இவை உடல் எடை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் இரண்டு கூறுகளாகும். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, 250 மில்லி பாலில் (1 கப்) கிட்டத்தட்ட 5 கிராம் கொழுப்பு மற்றும் 152 கலோரிகள் உள்ளன. குறைந்த கலோரி உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள், பொதுவாக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களைத் தவிர்ப்பார்கள்.


ஆனால் பாலை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா என்பதற்கான பதில் நிச்சயம் தவிர்க்க கூடாது என்பது தான். பால் உடல் எடையை அதிகரிக்க செய்யாது. இதில் புரதம் நிறைந்துள்ளது, இது தசையை கட்டமைக்கவும் தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது. புரதம் மட்டுமல்ல, இதில் துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி உள்ளது.

இது மட்டுமின்றி, பால் உட்கொள்வதன் மூலம், பசியைக் குறைக்கும் ஹார்மோன்களான GLP-1, PYY மற்றும் CCK போன்ற ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது, அதே நேரத்தில் பசியை தூண்டும் ஹார்மோனான கிரெலின் (ghrelin) அளவைக் குறைக்கிறது.

பால் உங்கள் எலும்புகளுக்கு நல்லது என்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. 250 கிராம் பாலில் 8 கிராம் புரதம் மற்றும் 125 மி.கி கால்சியம் உள்ளது. தேவையான அளவு பால் குடிப்பது எப்போதுமே நல்லது.


பால் உணவுகளை முற்றிலுமாகத் தவிர்த்தவர்களைக் காட்டிலும் குறைந்தது மூன்று வேளை பாலை உட்கொண்டவர்கள் அதிக எடையைக் குறைத்துள்ளனர் என்பது 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாலில் உள்ள கால்சியம் உடல் பருமன், வளர்சிதை மாற்ற நோய்க்குறி, டைப் -2 நீரிழிவு மற்றும் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.


எனவே, உங்கள் எடை இழப்பு இலக்குகளை அடைய நீங்கள் முயற்சி செய்தால், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உங்கள் உணவில் இருந்து தவிர்க்க வேண்டாம்.