திடீரென்று ஏற்படும் ஸ்ட்ரோக் பாதிப்பிற்கு பல ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மன அழுத்தம்தான் காரணம் - ஆய்வில் தகவல்.! - CBSE INFO

Monday, 25 July 2022

திடீரென்று ஏற்படும் ஸ்ட்ரோக் பாதிப்பிற்கு பல ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மன அழுத்தம்தான் காரணம் - ஆய்வில் தகவல்.!

 ஸ்ட்ரோக் என்பது திடீரென்று ஏற்படும் பாதிப்பு என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கும் கருத்திற்கு மாறாக, பல ஆண்டுகளாகவே மன அழுத்த அறிகுறிகள் தென்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரோக் ஏற்படும் பலருக்கும் நீண்ட காலமாக மன அழுத்தம் இருந்திருக்கும் என்கிறது இந்த ஆய்வு.இதுகுறித்து ஜெர்மனி நாட்டின் முன்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் மரியா புளோசில் கூறுகையில், “ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்பட்ட மற்றும் ஏற்படும் மக்களுக்கு இருக்கும் மிக முக்கியமான அறிகுறி மன அழுத்தம் தான். ஸ்ட்ரோக்கிற்கு பிந்தைய நிலையிலும் மன அழுத்தம் ஏற்படும் இது பொதுவாக அறியப்படுகிறது.

ஆனால், எங்களது ஆய்வில் தெரிய வந்திருப்பது என்னவென்றால் ஸ்ட்ரோக்கிற்கு பிறகு மட்டுமே மன அழுத்தம் அதிகரிப்பதில்லை. மாறாக, ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கு முன்பாகவே அந்த மன அழுத்தம் ஏற்கனவே அதிகரித்த விஷயமாக இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

ஆய்வில் கண்டறியப்பட்டது என்ன.?

சுமார் 10 ஆயிரத்து 797 பெரியவர்களைக் கொண்டு 12 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் பங்கேற்றவர்களின் சராசரி வயது 65 ஆகும். இந்த ஆய்வுக் காலத்திலேயே 425 நபர்களுக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டது. இந்த ஆய்வின் விளைவாக தெரிய வந்தது என்னவென்றால், மன அழுத்தம் என்பது ஸ்ட்ரோக்கிற்கு பிந்தைய பிரச்சனை மட்டுமல்ல, ஸ்ட்ரோக்கிற்கு முந்தைய பிரச்சினையாகவும் அது இருக்கிறது என்று கண்டறியப்பட்டது.

ஆய்வு எப்படி மேற்கொள்ளப்பட்டது.?

ஆய்வில் பங்கேற்றவர்களிடம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளிலும் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் குறித்து கேட்டறியப்பட்டது. குறிப்பாக தனிமையுடன் உணர்வது, கவலையுடன் இருப்பது, தூக்கமின்மையுடன் இருப்பது போன்ற பிரச்சனைகள் குறித்து கேட்கப்பட்டன. எந்த அளவுக்கு அறிகுறிகள் அதிகமாக இருந்ததோ அந்த அளவுக்கு அவர்களது ஸ்கோர் அதிகமாக இருந்தது.

ஆய்வு முடிவு சொல்வது என்ன.?

ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நபரின் ஸ்கோர் என்பது 0.33 பாயிண்டுகள் அதிகரித்திருப்பது தெரிய வந்தது. ஸ்ட்ரோக் ஏற்படாத நபரின் 6 ஆண்டுகளுக்கு முந்தைய அறிகுறிகள் என்பது, ஸ்ட்ரோக் ஏற்பட்ட நபருக்கு உள்ள அறிகுறிகளை போன்றே இருந்தது.

எந்தெந்த அறிகுறிகளை கவனமாக அணுக வேண்டும்

* கவனித்தல் திறனில் சிரமம்

* உடல் சோர்வு மற்றும் அதிகமான களைப்பு

* எந்தக் காரணமும் இன்றி குற்ற உணர்ச்சியோடு இருப்பது

* எதிர்மறை சிந்தனை

* முறையற்ற தூக்கமின்மை பழக்கம்

* ஓய்வின்மை

* ஏற்கனவே விரும்பிய ஒரு விஷயம் மீது ஆர்வத்தை இழப்பது

* சாப்பிடும் பழக்கத்தில் மாற்றம்

* தொடர்ச்சியான தலைவலி

* வயிறு சார்ந்த பிரச்சனைகள்

* வெறுமையை உணர்வது

உலகெங்கிலும் 15 மில்லியன் மக்கள் ஸ்ட்ரோக் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதே ஸ்ட்ரோக் அல்லது மூளைத் தாக்குதல் என்று கூறப்படுகிறது. உலகில் இறப்பை ஏற்படுத்தும் இரண்டாவது பெரிய நோயாகவும், உடல் செயலின்மையை ஏற்படுத்தும் மூன்றாவது பெரிய நோயாகவும் ஸ்ட்ரோக் இருக்கிறது.


அபாய காரணங்கள்

வாழ்வியல் மாற்றம் தான் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு மற்றும் குடும்ப பாதிப்பு வரலாறு போன்றவை ஸ்ட்ரோக் ஏற்பட காரணங்களாக உள்ளன.


Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment