முளை கட்டிய பயறு வகைகளை காலை உணவாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.! - CBSE INFO

Monday, 25 July 2022

முளை கட்டிய பயறு வகைகளை காலை உணவாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!

 காலை உணவு என்பது ஒவ்வொரு நாளின் மிக முக்கியமான உணவாகும். காலை உணவிற்கு பல்வேறு வெரைட்டிகள் இருந்தாலும், முளை கட்டிய பயறு வகைகளை காலை உணவாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. நம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் கொண்டைக் கடலை, பாசிப்பயறு, கொள்ளு, தட்டைப்பயறு, மொச்சைப்பயறு, போன்ற பயறு வகைகளையும் கம்பு, கேழ்வரகு, கோதுமை போன்ற தானியங்களையும் முளை கட்டி உணவாகப் பயன்படுத்தலாம். முளை கட்டிய பயறு வகைகள் நம் உடலுக்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பது குறித்து உணவியல் நிபுணர் சுமன் திப்ரேவாலா, சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் ஷேர் செய்துள்ளார்.முளை கட்டிய பயறு வகைகள் "ஊட்டச்சத்தின் ஆற்றல் மையங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவற்றில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

பயறு வகைகளை முளைக்கட்ட வைத்து சாப்பிடுவதால் இந்த ஊட்டச்சத்துக்களின் மதிப்பை அதிகரிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். திப்ரேவாலாவின் கூற்றுப்படி, முளை கட்டிய பயறு வகைகள் ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல மூலமாகும் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன. இவற்றில் புற்றுநோய் எதிர்ப்பு தன்மையும் உள்ளது. முளை கட்டிய பயறு வகைகளில் அத்தியாவசிய கொழுப்பு அமில உள்ளடக்கமானது பயறுகள் முளைக்கும் போது அதிகரிக்கிறது” என்று திப்ரேவாலா விளக்கியுள்ளார்.

முளை கட்டிய பயறு வகைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் மற்ற நன்மைகள் :

* உடலுக்கு போதுமான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை பெற உதவுகிறது.

* முளை கட்டிய தானியங்களில், சாதாரண தானியங்களில் உள்ளதை விட 20 மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக வைட்டமின் ஏ , பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அதிரிகரிக்கின்றன.

* முளை கட்டிய பயறு வகைகளை வழக்கமாக உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

* முளை கட்டிய பயறு வகைகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இது ஒரு ப்ரீபயாடிகாக செயல்படுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

* உடல் பருமன் உள்ளவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முளை கட்டிய பயறுகள் உதவும் என்று பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

முளை கட்டிய பயறு வகைகளை பச்சையாகவோ அல்லது சாலட் செய்தோ சாப்பிடுவது நல்லது.

முளைக்கட்டும் முறை :

முளைக்கட்டுதல் என்பது பயறுகளை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, நீரை வடிகட்டி, ஊறிய பயறுகளை, ஒரு பருத்தித் துணியில் தளர்வாகக் கட்டி தொங்கவிட வேண்டும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறைகள், நீரை தெளித்து ஈரப்பதத்தில் வைக்கும் நிலையில், முளையானது 6 முதல் 8 மணி நேரத்திற்குள் தோன்றும்.

Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment