நீரில் ஊற வைத்த உலர் திராட்சையின் அற்புத நன்மைகள்.!

 உடலின் பல பிரச்சனைகளை நீக்குவதில் திராட்சை நீர் (Raisin Water) மிகவும் பயனுள்ள முடிவுகளைத் தருகிறது என்பது பலருக்குத் தெரியும்.

இந்த திராட்சை நீரானது நோய்களை நீக்குவதுடன் நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. குறிப்பாக கல்லீரல் நோய்களில், (Liver Disease) திராட்சை நீர் மிகவும் பயனுள்ள முடிவுகளைத் தருகிறது. ஆனால் இதற்கு திராட்சை தண்ணீரை சரியாக தயாரிக்க வேண்டியது அவசியம்.

திராட்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
உலர்பழங்களாக (Fruits) அதிகம் பயன்படுத்தப்படும் திராட்சைப்பழங்களில் ஒன்றான திராட்சை (Benefits of Raisin) சுவையில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி, இதில் உள்ள சத்துக்கள் பல நோய்களைக் குணப்படுத்த பெரிதும் உதவுகின்றன. திராட்சை தண்ணீரின் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.


* இரத்த சோகை உள்ளவர்கள், இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.

* மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் சிறுது உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

* சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வந்தால் சிறுநீரக நோய்த்தொற்று குணமாகும்.

* உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் சில உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.

* திராட்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. எனவே தினமும் திராட்சை நீர் குடித்தால் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் மேம்படுத்துகின்றன. மீண்டும் மீண்டும் நோய்களுக்கு ஆளாகும் அத்தகையவர்கள் உலர் திராட்சை நீரை தினமும் குடிக்க வேண்டும்.

திராட்சை தண்ணீர் செய்வது எப்படி
திராட்சை தண்ணீரின் பல நன்மைகளைப் பெற, அதை சரியான முறையில் தயாரிப்பது முக்கியம். இதற்கு, 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 150 கிராம் திராட்சையை இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் உலர்ந்த திராட்சை தண்ணீரை வடிகட்டி, சிறிய தீயில் சூடாக்கவும். பிறகு வெறும் வயிற்றில் தேநீர் போல சூடாக குடிக்கவும். நீங்கள் விரும்பினால், அதில் புதிய எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.

(Disclaimer: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.)

0 Comments:

Post a Comment