Apple என்னும் அற்புதம்: எப்போது, எப்படி சாப்பிட்டால் அதிக பயன்களை அடையலாம்?

 



ஆப்பிள் என்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு பழமாகும்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிகம் சாப்பிடப்படும் பழமாக ஆப்பிள் உள்ளது. அதன் தனிச்சிறப்பு வாய்ந்த பண்புகளின் காரணமாக, இது ஒரு மேஜிகல் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் போதுமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நோய் எதிர்ப்பு கூறுகள் உள்ளன.

ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, சில விசேஷ கூறுகள் ஆப்பிளில் (Apple) காணப்படுகின்றன. இவை உடலில் புதிய செல்கள் உருவாவதை ஊக்குவிக்கின்றன. சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைப்பதில் ஆப்பிள் நன்மை பயக்கும். மேலும், இது உடலில் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும்.

நிபுணர்கள் கூறுவது என்ன?

உணவியல் நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங்கின் கருத்துப்படி, பெக்டின் போன்ற நன்மை பயக்கும் நார்ச்சத்து ஆப்பிளில் உள்ளது. தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் (Diabetes) மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. ஆப்பிளில் வைட்டமின் சி சீரான அளவில் உள்ளது. இதனுடன் இரும்புச்சத்தும் போரானும் இதில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் இணைந்தால் எலும்புகளுக்கு பலம் கிடைக்கும்.

ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 அற்புதமான நன்மைகள்

1. மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆப்பிள் சாப்பிடுவது நன்மை பயக்கும்.
2. சிறுநீரக கல் பிரச்சனையை தவிர்க்க தினமும் காலையில் ஆப்பிளை சாப்பிடலாம்.
3. ஆப்பிள் சாப்பிடுவது, வயதாவதால் மூளையில் ஏற்படும் பாதிப்பை நீக்க உதவுகிறது.
4. ஆப்பிளில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. இது செரிமான (Digestion) செயல்முறையை சரியாக வைத்திருக்க உதவுகிறது.
5. ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து பற்களை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.
6. ஆப்பிளை தவறாமல் உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
7. தினமும் ஆப்பிளை தவறாமல் உட்கொள்வது டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
8. ஆப்பிள் சாப்பிடுவது இதயத்திற்கு மிகவும் நல்லது. மலச்சிக்கல் பிரச்சனையும் வராது.
9. ஆப்பிளின் வழக்கமான பயன்பாடு எடையைக் கட்டுப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும்.
10. தினமும் காலையில் ஆப்பிள் ஜூஸ் சாப்பிட்டு வந்தால், முகத்தில் உள்ள புள்ளிகள் குறையும்.

ஆப்பிள் சாப்பிட சரியான நேரம் எது?

உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கருத்துப்படி, ஆப்பிளை எந்த நேரத்திலும் சாப்பிடலாம். காலையில் ஆப்பிளை உட்கொண்டால், அதிக பலன் கிடைக்கும். ஏனெனில் ஆப்பிளில் நார்ச்சத்தும் பெக்டின் சத்தும் அதிகமாக உள்ளது. எனவே, இதை இரவில் உட்கொண்டால், செரிமானம் செய்வதில் சிக்கல் ஏற்படலாம்.

குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்று அல்ல. இது கல்வி நோக்கத்துக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment